தமிழே உலகின் மூத்த மொழியா ? சில சந்தேகங்கள்
1) நம் பாரத நாட்டில் 1600க்கும் மேற்பட்ட பாஷைகள் வழக்கத்தில் இருந்துள்ளது என்று கூறப்படுகிறது. இவை அனைத்திற்கும் 'தமிழே' தாய்மொழி என்பது 'நம்பும்படி' (அல்லது) 'ஏற்றுக்கொள்ளும்படி' இல்லை (அல்லது) இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை
2) பின்வருவனவற்றுள் எது உண்மையாக இருக்க முடியும் என்பதை நான் உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்
(a) 'தமிழ்' இருந்த (அல்லது) வளர்ந்து வந்த காலத்தில், இந்தியாவில் தமிழை தவிர வேறு மொழியே கிடையாது
(b) 'தமிழை' தவிர இந்தியாவில் வேறு ஒரு சில மொழிகள் இருந்தன ஆனால் அவற்றிற்கு 'எழுத்துருவம்' (script) கிடையாது
தமிழர்கள் lemuria (லெமுரியா) கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்கிற ஒரு சாராரின் கருத்துப்படி. லெமூரியா அழிந்த காலத்திற்கு பிறகு தமிழர்கள் இப்போது உள்ள 'தமிழ்நாட்டுக்கு' நகர்ந்து இருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்
இப்போது பின்வரும் ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம்
பண்டைய காலத்தில் மனிதர்கள் சிறு-சிறு குழுக்களாக வசித்து வந்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இப்போது தமிழ்நாட்டில் ஏதோ ஒரு பகுதியில் 'ஒரு குழு' (Group A) இருந்ததாக வைத்து கொள்வோம். அதே போல் ஆந்திராவில் (Group B) ஏதோ ஒரு பகுதியில் 'வேறொரு குழு' இருந்ததாக வைத்து கொள்வோம்
தமிழே உலகின் 'முதல்' (அல்லது) 'மூத்த' மொழி என்பதால் இந்தியாவில் வழக்கத்தில் இருந்த 1600 மொழிகளுக்கும் 'தமிழே' தாய் மொழியாக இருந்து இருக்க வேண்டும்
அதாவது 'Group Aல்' இருந்து ஒருவர் (அல்லது) ஒரு சில பேர் 'Group B' மக்களை சென்றடைந்து அவர்களுக்கு தமிழ் சொல்லி கொடுக்கும் வரை 'Group B' மக்கள் சைகை பாஷை தான் பேசி இருக்க வேண்டும். ஏனெனெனில் பண்டைய இந்தியாவில் 'தமிழை' தவிர வேறு மொழி இல்லை
இது நம்பும்படி (அல்லது) ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறதா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்
குறிப்பு:- ஒரு மனிதன் ஒரு பகுதியில் இருந்து வேறொரு பகுதிக்கு செல்வது என்பது பண்டைய (அல்லது) ஆதி காலத்தில் மிகப்பெரிய சவாலாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் 'மனிதர்கள்' காடுகள், மலைகள், கரடு முரடான பாதைகள், பாம்புகள், தேள்கள், வனவிலங்குகள் என அனைத்தையும் தாண்டி தான் வேறொரு பகுதியை அடைய முடியும்
என் கருத்துப்படி குறைந்தபட்சம் '3-4 மொழிகள்' (ஸமஸ்க்ரிதம் and தமிழை தவிர) சமகாலத்தில் இருந்து இருக்க வேண்டும் (உதாரணமாக prathmic). ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொழிகள் வளர்ந்து வந்த காலத்தில் அவை உருமாற்றம் அடைந்து, வழக்கொழிந்து போயிருக்க வேண்டும் என்பதே உண்மை.
எந்தெந்த மொழிகள் எந்தெந்த காலத்தில் இருந்தது என்பதை நிரூபிக்க இப்போது நம்மிடம் போதிய சான்றுகள் இல்லை என்பதே உண்மை
நன்றி
சதீஷ் குமார்