Thursday, November 4, 2021

திருமண முறிவு ஏன் ? திருமணம் விவாகரத்தாக உளவியல் காரணங்கள் என்ன ?

நம் முன்னோர்கள் நமக்கு வகுத்து தந்த 'திருமண பந்தத்தை' நாம் புரிந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ பழகிக்கொள்ள  என்பதை இப்பதிவின் வாயிலாக நான் என்னுடைய கோரிக்கையாக வைக்கிறேன்  


அந்த காலத்தில் (1900களில்) நமது தாத்தா, பாட்டி விவாகரத்து செய்து கொண்டதாக நாம் கேள்விபடவில்லை.  அதே போல் நம் அம்மா அப்பாவும்  (2000ம் வரை) விவாகரத்து செய்து கொள்ளவில்லை.  சில விதிவிலக்குகள் இருக்கலாம் அது வேறு 


ஆனால் தற்போது (கடந்த 20 ஆண்டுகளில்)  விவாகரத்து வழக்குகள்  35% வரை பெருகி உள்ளதாக ஒரு அறிக்கை சொல்கிறது


திருமண பந்தத்தை ஏன்  இவ்வளவு சீக்கிரம் முறித்துக்கொள்ள வேண்டும் ?.  கணவன்-மனைவிக்குள் இந்த ஒத்துப்போகாத தன்மை வளர என்ன காரணம் இருக்க முடியும் ?


எனக்கு தெரிந்து இந்த 21ம் நூற்றாண்டில் 'தம்பதிகள் பிரிய' பணம், படிப்பு, அழகு, அந்தஸ்து, ஜாதி, மதம் இவை காரணமாக இருப்பதில்லை.  சில விதிவிலக்குகள் இருக்கலாம் அது வேறு 


எனக்கு தெரிந்து இந்த நூற்றாண்டுக்கு ஏற்றவாறு சொல்ல வேண்டும் என்றால்  இரண்டு காரணங்களை சொல்லலாம்   (1)   ஆண்-பெண் சுதந்திரம்   (2)   தாமத திருமணம்.   


மேற்கூறிய இரண்டு காரணங்களும் ஒன்றுக்கு-ஒன்று  சம்பந்தப்பட்டவையே.  அது எப்படி என்பதை இப்போது சுருக்கமாக பார்க்கலாம் 


தாமத திருமணம்


தற்போது பெண் கிடைப்பது  என்பது  'குதிரை கொம்பாக' இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்


இந்த காலத்தில் திருமணம் செய்யும் வயது சராசரியாக பெண்ணிற்கு 27 அல்லது 28 வயதில் தான் நடக்கிறது.   அதே போல் ஆணுக்கு  சராசரியாக 30க்கு மேல் தான் திருமணம் நடக்கிறது.  இதில் இன்னும் நிறைய பேருக்கு 35 அல்லது 38 வயதில் கூட திருமணம் நடக்கிறது என்பதும் நமக்கு தெரிந்ததே 


சரி தாமதமாக திருமணம் செய்தால் என்ன தான் பிரச்சனை ?


  பிள்ளைகள் தன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் (அதாவது 21 வயது வரை)  தன்னுடைய பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்க்கப்படுகிறார்கள்.  


படிப்பை முடித்து உடனே  வேலை கிடைத்து 25 அல்லது 26 வயதிற்குள் திருமணம் செய்து விட்டால் 'கட்டுப்பாடு' என்பது 'பெற்றோர்களிடம்' இருந்து 'கணவன் அல்லது மனைவியிடம்' சென்று விடும்.  திருமணம் ஆனவுடன் 'ஆண் மற்றும் பெண்' இருவருமே 'குறுகிய காலத்திற்குள்' மீண்டும் 'கட்டுப்பாடு' என்கிற வளையத்தில் வந்துவிடுவார்கள்.  சட்டமும் அந்த வயது வரம்பை தான் பரிந்துரைக்கிறது 



ஆனால் படிப்பு முடித்து 28-35 வயதுக்குள் திருமணம் செய்து கொண்டால் இங்கே தான் 'ஆண்-பெண்' சுதந்திரம் தலை தூக்கும்


படிப்பு முடித்து 7 வருடங்கள், 10 வருடங்கள், 12 வருடங்கள் கழித்து 'நீண்ட இடைவெளியில்' திருமணம் செய்தால் 'ஆண்-பெண்' மனநிலை எப்படி இருக்கும்.  திருமணம் ஆகும் வரை 


1)  தாங்கள் நினைத்ததை நினைத்தபடி செய்து கொள்வார்கள் 

2)  நண்பர்கள்-நண்பிகளுடன் நினைத்தபடி நினைத்த நேரத்தில் பழகி கொள்வார்கள் 

3)  தங்களுக்கு தேவையானதை தாங்களே செய்து கொள்வார்கள்

4)  பெரிய அளவில் கேட்க ஆள் இல்லாததால்  தங்களுக்கு பிடித்தவற்றை அல்லது பிடித்த விஷயங்கள் உடனே நிறைவேற்றி கொள்வார்கள் அல்லது நிறைவேற்றி கொள்ள முயல்வார்கள்  


நாட்கள், வருடங்கள் செல்ல செல்ல மேலே சொன்ன விஷயங்களுக்கு 'ஆண்-பெண்' இருவருமே தங்களை பெருமளவில் பழக்கி கொண்டு இருப்பார்கள்.  


30-35 வயதில் திருமணம் செய்தால் என்ன ஆகும் ?  மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் நினைத்தபடி நடக்காமல் போகும்.  'ஆண்-பெண்' இருவருக்குமே இது பொருந்தும்.    


ஏனெனில், பல வருடங்களாக தங்கள் விருப்பப்படி  இருந்துவிட்டு திடீர் என்று 'கட்டுப்பாட்டு' வளையத்திற்குள் வர இருவருமே தங்களை  மனதளவில் தயார் செய்து கொள்ள நேரம் பிடிக்கும் அல்லது ஒரு சில பேருக்கு இது சுத்தமாக பிடிக்காமல் போகும்.  கணவன்-மனைவிக்குள் இது ஒரு விதமான 'பிணக்கம்' அல்லது 'சகிப்பற்ற தன்மையை'  உருவாக்குகிறது 


என்னை பொறுத்த வரை 'ஆண்-பெண்'  இருவரையுமே எந்த அளவுக்கு சீக்கிரம் 'கட்டுப்பாடு' என்கின்ற வளையத்திற்குள் வைத்திருக்கிறோமோ அது அவர்களையும் இந்த சமூகத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை  


'Solar-system'  கட்டுப்பாடுடன் இயங்குவதால் தானே இந்த பிரபஞ்சம் ஒழுங்காக இயங்குகிறது 


நன்றி
சதீஷ் குமார் 

No comments:

Post a Comment

நாட்டு நாய்களை காப்பாற்றுங்கள்

 இக்கட்டுரையை படிப்பவர்கள் இனிமேல் தயவு செய்து 'தெரு நாய்கள்' என்று அழைக்கவேண்டாம்.   'தெருவில் வசிக்கும் நாய்கள்' என்று அழை...