Sunday, May 7, 2023

நாட்டு நாய்களை காப்பாற்றுங்கள்

 இக்கட்டுரையை படிப்பவர்கள் இனிமேல் தயவு செய்து 'தெரு நாய்கள்' என்று அழைக்கவேண்டாம்.   'தெருவில் வசிக்கும் நாய்கள்' என்று அழைத்து பழகுங்கள்.


விசுவாசத்திற்கு பெயர்பெற்ற விலங்கு 'நாய்' என்றால் அது மிகையாகாது.   ஆனால் ஏனோ பெரும்பாலானவர்கள் அவற்றை கண்டுகொள்வதே இல்லை

மனிதர்களுக்கு எப்படி உணவு, உடை, உறைவிடம் அவசியமானதோ அதே போன்று நாய்களுக்கும் மூன்றும் தேவையே.   


 தெருவில் வசிக்கும் நாய்களுக்கு இல்லாத பிரச்சனைகளே இல்லை என்று சொல்லலாம்.   அவைகளுடைய வாழ்க்கையில்  ஒவ்வொரு நாளை கடத்துவதும் கிட்டத்தட்ட ஒரு யுகத்தை கடத்துவதற்கு சமானமாகும் என்பது என் கருத்து 


அவைகள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒரு சிலவற்றை பார்ப்போம் 

1)  குடிக்க நல்ல தண்ணீர் கிடையாது 

2)  இருக்க இடம் கிடையாது 

3)  வெயில் காலத்தில் ஒதுங்க நிழல் கிடையாது (மனிதர்கள் நாம் அனைத்தையும் பிளாட்களாக மாற்றிவிட்டோம்)

4)  தெருவில் வசிப்பதால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளால் அவதியுறுதல் 

5)  மழை காலத்தில் அவற்றின்  நிலைமை படு மோசம் 

6)  சாதாரண ஜுரம் வந்தால் கூட அவற்றை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆட்கள் இல்லை 


மேற்குறிய பிரச்சனைகளை தவிர்த்து இன்னும் அவைகளுக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளது.  அவற்றை நேரம் கிடைக்கும் போது அடுத்த பதிவில் எழுதுகிறேன் 


சரி.  பிரச்சனைகள் பார்த்தாகிவிட்டது.  ஆனால் தீர்வு எப்படி ?   அதற்கான பணம் ?  என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது 


இந்த பிரச்சனைகளுக்கு ஒரு சில தற்காலிக தீர்வை (அல்லது  வேண்டுகோள்களை) முன்வைக்க விரும்புகிறேன்.  


தண்ணீர் பிரச்னையை தீர்க்க 


குறைந்தபட்சம் தெருவில் ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்டோர், அவர்கள் வீட்டிற்கு வெளியில் ஏதாவது bucket அல்லது பாத்திரத்தில் தண்ணீரை வையுங்கள்.   இதற்க்கு எந்த செலவும் இல்லை 


உணவு பிரச்னையை தீர்க்க (சிறிதளவு நேரமும், பணமும் நாம் செலவு செய்ய வேண்டும்)


1)  யாரேனும் ஒருவர் அவர் தெருவில் வசிக்கும் நாய்களுக்கு வாரம் ஒரு முறை  'உணவு சமைத்து' பரிமாறலாம்.  (தனிப்பட்ட  முறையில் நான் என்ன செய்கிறேன் என்றால் ஞாயிற்று கிழமைகளில் அவற்றிக்கு "கறி சோறு" பரிமாறுகிறேன்.  எங்கள் பகுதியில் உள்ள கறிக்கடை ஒன்றில் Rs 100/-  கொடுத்தால் bulk ஆக கோழியின் எலும்பு துண்டுகள், அவற்றின் தோல் முதலியவை கிடைக்கும்.   வாரம் ஒரு முறை Rs 100/- அத்தனை பெரிய தொகை அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும்)


2)  மேல் சொன்ன 'சோறு' பரிமாறும் விஷயத்தை நம்மை விட 'உணவகம்' அல்லது 'ஹோட்டல்' தொழில் செய்பவர்கள் மிகவும் எளிதாக செய்யமுடியும் 


தினமும் அவர்கள், மீறும் உணவை குறைந்தபட்சம் 'ஒன்று' அல்லது 'இரண்டு' நாய்களுக்கு தாராளமாக பரிமாற  முடியும் 



 இட பிரச்னையை தீர்க்க (தற்காலிக  தீர்வு)


நாய்களுக்கு தாற்காலிகமாக நாம் அந்தந்த தெருவில் உறைவிடம் அமைத்து கொடுக்கலாம்.   இதற்க்கு வெளிநாடுகளில் பல  முறைகளை பின்பற்றுகின்றனர் 


நம்மூரை பொறுத்தவரை சற்று பெரிய அளவு PVC பைப்புகளை (ஒன்று அல்லது இரண்டு) வாங்கி வைத்தாலே போதும்.   என்ன idea இது ?  டுபாக்குர் idea வாக இருக்கிறதே என்று நீங்கள் கேட்பது எனக்கு காதில் விழுகிறது 






நான் நம்மூரில் இல்லாததை ஒன்றும் சொல்லவில்லை.   எத்தனையோ குடும்பங்கள் இன்னுமும் பூமியில் பதியப்படும் மிகப்பெரிய அளவிலான பைப்புகளிலேயே தங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.   அந்த முறையை தான் நான் நாய்களுக்கும் சொல்லி இருக்கிறேன் 


இட பிரச்னையை தீர்க்க (நிரந்தர தீர்வு)


இதற்க்கு நிரந்தர தீர்வு நாம் குறைந்தபட்சம் 'வீட்டிற்கு ஒரு மரம்' என்கிற மாதிரி 'வீட்டிற்கு ஒரு நாய்' வளர்த்தால்  அதுவே நிரந்தர தீர்வாகும்.  ஆனால் இதை அவ்வளவு எளிதாக மக்களை செய்ய வைக்க முடியாது 


நாய்களை தத்து எடுக்க முடியவில்லை என்றாலும் கூட 'நாய் குட்டிகளை' தத்து எடுத்து நம்மால் வளர்க்க முடியும் 


இன்னும் எழுத நிறைய இருந்தாலும் நேரம் இல்லாமையால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன் 


நன்றி!!!   வணக்கம் !!!!   மீண்டும் சந்திப்போம் !!!!

No comments:

Post a Comment

நாட்டு நாய்களை காப்பாற்றுங்கள்

 இக்கட்டுரையை படிப்பவர்கள் இனிமேல் தயவு செய்து 'தெரு நாய்கள்' என்று அழைக்கவேண்டாம்.   'தெருவில் வசிக்கும் நாய்கள்' என்று அழை...