நம் இந்தியாவில் நிறைய பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்/
பெரும்பாலான பன்னாட்டு நிறுவனத்தில் 'Talent acquisitioln' டீம் என்று ஒன்று இருக்கும் . இந்த டீமினுடைய வேலை என்னவென்றால் அங்குள்ள 'காலி அல்லது புதிய' பணியிடங்களுக்கு 'சரியான' ஆட்களை தேர்ந்து எடுப்பது தான்.
ஆனால் talent acquistion team அதை செய்வது இல்லை என்பது தான் உண்மை. உதாரணமாக புதிதாக அல்லது காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒரு நபரை தேர்ந்தெடுக்க அவர்கள் பின்வரும் முறையை தான் தேர்ந்து எடுக்கிறார்கள்
அதாவது தேர்ந்து எடுக்கப்பட்ட நபர் 15 நாட்கள் முதல் அதிகபட்சமாக 30 நாட்கள் கால அவகாசத்தில் இவர்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட வேண்டும்/ அதாவது notice period குறைவாக உள்ளவர்களோ (அல்லது) ஏற்கனவே resign செய்தவர்களோ தான் இவர்களுடைய target.
பன்னாட்டு நிறுவனங்கள் 'talent acquisition' (அல்லது ) 'interview' என்கிற . பெயரில் என்ன செய்கிறார்கள் என்பது பின்வருமாறு
1) நம்மூரை பொறுத்தவரை interviewல் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லிவிட்டால் அவர் தான் புத்திசாலி. 10 கேள்விகளுக்கு 7க்கு சரியான பதில் சொன்னால் கூட போதுமானது.
இதில் comedy என்னவென்றால் interviewer வருபவர்களிடம் அதே கேள்விகளை வேறு ஒரு நபரிடம் கேட்கமாட்டார்/ கேள்விகளை மாற்றி கேட்பார். இரண்டாவது (அல்லது) மூன்றவதாக வந்த நபருக்கு இவருடைய கேள்விகள் எளிமையாக இருந்தால் அவர் எளிதில் select ஆகி விடுவார்
2) Weekend drive என்று 2-3 வாரங்கள் தொடர்ச்சியாக ஆள் சேர்ப்பு நடைபெறும். அப்போது 1st weekல் வந்த technical panel (அதாவது கேள்வி கேட்கும் குழு) பெரும்பாலும் 2வது வாரத்திற்கு வரமாட்டார்கள்
இதில் என்ன காமெடி என்றால் 'முதல் வாரம்' interviewல் fail ஆகி 2வது வாரம் நடைபெறும் interview;ல் பாஸ் ஆகி வேலைக்கு சேர்ந்த நிறைய பேர் உண்டு. ஏனென்றால் முதல் வாரத்தில் யாரெல்லாம் interviewக்கு வந்தார்கள் என்பது 2வது வாரத்தில் வந்த கேள்வி கேட்கும் குழுவிற்கு தெரியாது அல்லவா ?
இவர்களின் சேட்டைகளை அடுத்த பதிவில் தொடருவோம்
நன்றி
சதீஷ் குமார்
No comments:
Post a Comment