நான் அரசியல் விமர்சகன் இல்லை என்பதையும் என் அறிவுக்கு எட்டியதை நான் இங்கே எழுதியுள்ளேன் என்பதையும் நான் தெரிவித்து கொள்கிறேன்.
நாம் தமிழர் கட்சிக்கு ஏன் 'வெற்றிக்கனி' எட்டாக்கனியாகவே உள்ளது எனபதற்கு 4 முக்கிய காரணங்களை கீழே கொடுத்துளேன்
1) கொள்கை பிடிப்பு
2) வாக்கு வங்கி
3) மண்டலவாரி ஆதரவு
4) மொழிவாரி ஆதரவு
கொள்கை பிடிப்பு
நாம் தமிழர் கட்சி கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் (அல்லது) மாற்றத்தை விரும்பியவர்கள் கிட்டத்தட்ட 7% பேர் என்பதை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மூலமாக நாம் எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்
நாம் தமிழர் கட்சி அனைத்து தரப்பினரையும் அரவணைத்து கொண்டாலும் 'தேசியம், தெய்வீகம், திராவிடம்' என்ற கருத்தே மக்கள் மனதில் ஆழமாக படிந்துள்ளது.
'திராவிட' சிந்தனையை எளிதில் விமர்சித்து விடலாம் ஆனால் 'தேசியம் மற்றும் தெய்வீகத்தை' எதிர்க்க முற்பட்டால் ''நாட்டுப்பற்றும், ஆன்மீக சிந்தனையும்' கொண்ட மக்களால் இந்த கருத்தை
ஏற்றுக்கொள்ளமுடியாது.
அது மட்டுமன்றி அக்கட்சி தலைவர் சீமான் சொல்வது போல் 'தமிழ்நாடு மற்றும் இலங்கை தமிழர் பகுதி' இவற்றை ஒருங்கிணைத்து 'தமிழர் நிலம்' என்று ஒன்றை உருவாக்குவது என்பது சாத்தியமற்ற ஒன்று (குறிப்பாக LTTE அழிக்கப்பட்ட பிறகு). மேலும் இந்தியாவும், ஸ்ரீலங்காவும் இதை ஒருபோதும் அனுமதிக்காது என்பதே உண்மை
எனவே கொள்கை ரீதியாக 'நாம் தமிழர்' வெகுஜனத்தின் நம்பிக்கையை பெற இயலவில்லை என்பதே யதார்த்தம்
வாக்கு வங்கி
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழரின் வாக்கு சதவீதம் கிட்டத்தட்ட 7% உள்ளது. அதற்கான ஆதார சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வரும் 2024 நாடளுமன்ற தேர்தலில் அந்த கட்சியின் செயல்பாடை பொறுத்து இது 10% வரை வளர வாய்ப்பு இருக்கிறது
https://en.wikipedia.org/wiki/2021_Tamil_Nadu_Legislative_Assembly_election
ஆனால் 10% சதவீதமாக வாக்கு வங்கி உயர்ந்தாலும் அது ஆட்சியை பிடிக்க (அல்லது) எதிர்க்கட்சியில் அமர போதுமானதாக இருக்காது என்பதே உண்மை
நாம் தமிழர் அதன் வாக்கு சதவீதத்தை உயர்த்த கடினமாக உழைக்க வேண்டும் அல்லது கூட்டணியில் சேரவேண்டும்
மண்டலவாரி ஆதரவு
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்ததே
சென்னையை பொறுத்தவரை 16 தொகுதிகள் இருக்கின்றன. சென்னை திமுகவின் கோட்டை என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. மறைந்த முதல்வர் MGRஆல் கூட சென்னையை அதிமுகவின் கோட்டையாக மாற்ற முடியவில்லை
அதே போன்று கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை 65 (கோயம்புத்தூர் - 10, ஈரோடு - 8, தர்மபுரி - 5, கிருஷ்ணகிரி - 6, சேலம் - 11, நாமக்கல் - 6, கரூர் - 4, திண்டுக்கல் - 7, திருப்பூர் - 8) தொகுதிகள் இருக்கின்றன. 10 வருட anti-incumbency பிறகும் அதிமுகவை 'திமுகவலேயே' இந்த மண்டலத்தில் வீழ்த்த முடியவில்லை
சென்னை + கொங்கு (16 + 65 = 81) இந்த இரண்டிலும் 'நாம் தமிழர்' வெல்ல கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை எனலாம்.
மீதம் இருப்பது (234 - 81 = 153) 153 தொகுதிகள். இதில் 118 தொகுதிகளை ஜெயிப்பதென்பது கிட்டத்தட்ட இமயமலை உயரத்தை எட்டிப்பிடிப்பதை போன்றதாகும்
மொழிவாரி ஆதரவு
2011 மக்கள் தொகை கணக்கு எடுப்பின் படி தமிழ்நாட்டில் 88% சதவீதம் பேர் தமிழ் பேசுபவர்களாக இருக்கிறார்கள். மற்ற மொழி பேசுபவர்கள் 12% சதவீதமாக உள்ளனர். இதற்கான சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது
https://www.populationu.com/in/tamil-nadu-population
2021 சென்சஸ் இன்னும் எடுக்கப்படவில்லை. சென்சஸ் 2022ல் எடுக்கப்பட்டால் தமிழ்நாட்டில் பிறமொழி பேசுபவர்களின் சதவீதம் 15%ஐ தொடலாம். ஏனெனில் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் குடிபெயர்ந்தவர்களின் (demographic change) எண்ணிக்கை கண்டிப்பாக உயர்ந்து இருக்க வேண்டும்.
உதாரணமாக சென்னையில் ஆந்திராவை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும், குறிப்பாக கோவை மண்டலத்தில் வட மாநிலத்தவர் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்க வேண்டும்
பிற மொழி (அல்லது) மாநிலத்து மக்களுக்கு 'நாம் தமிழர்' ஆதரவு என்பது கிட்டத்தட்ட அல்லது அறவே இருக்காது என்பது தான் உண்மை
நன்றி
சதீஷ் குமார்
No comments:
Post a Comment