Tuesday, August 12, 2025

நாய்களுக்கு பிழைப்பா (அல்லது) நாய் பிழைப்பா? உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பாதகங்கள் என்னென்ன ?


தெரு நாய்களின் மீதான சமீபத்திய தீர்ப்பு மாற்று கருத்து உள்ளர்வர்கள் இடையே ஆதரவும் விலங்குகள் நல ஆர்வலர்களின் எதிர்ப்பையும் பெற்று இருக்கிறது 


ஒரு விஷயத்தை நான் தெளிவு படுத்தி விட்டு என்னுடைய கருத்தை பதிகிறேன் 


நாய்களால் மனிதர்களுக்கு பிரச்சனை உண்டா என்றால் ஆம் உண்டு உண்டு உண்டு என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை 


உயிரிழப்பு என்பது தீராத, ஆறாத ரணத்தை தரும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை.  


ஆனால் ஒரு பக்க பிரச்சனைகளை அல்லது நாய்கள்  மட்டுமே பிரச்சனை என்று  பார்த்தால் அது சத்தியமாக நியாயமாக இருக்காது 


பின்வருவனவற்றை நீதிமன்றம் தன்னுடைய கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை 


1)  தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் போட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று கோர்ட் நம்புகிறது.  சரி.  அப்படியே இருக்கட்டும் 


முதலில் அரசாங்கத்திற்கு லட்ச கணக்கான நாய்களை  காப்பகத்தில் வைக்க ஊருக்கு வெளியே போதுமான நிலங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை 


போதுமான நிலங்கள் இருக்கின்றன என்று வைத்து கொண்டால் கூட, இது வரை எந்த வித தடுப்பூசியும் போடப்படாத நூற்று கணக்கான நாய்களை ஒரே இடத்தில் வைத்தால் அவற்றுக்கிடையே parvo மற்றும் canine distemper போன்ற உயிர் கொல்லி தொற்று நோய்கள் பரவவே வாய்ப்புகள் மிகவும் அதிகம் 


அதென்னப்பா canine distemper என்று தெரிய வேண்டும் என்றால் இந்தியாவின் gir காடுகளில் 23 சிங்கங்கள் இந்த கொடிய நோயால் September 2018ல் இறந்து போயின.  ஏனென்றால் இது தொற்று நோய் 


2)  பாம்பு கடியால்  இந்தியாவில் வருடந்தோறும் தோராயமாக 40,000 மரணங்கள் நடப்பதாக தெரிகிறது 

RTI  மூலமாக சரியான தகவலை பெற முயல்கிறேன் 


பாம்புகளை கட்டுப்படுத்த நீதிமன்றங்கள்  வழி வகைகள் சொல்ல முடியுமா ? அல்லது செய்ய முடியுமா ?


3)  கொசு கடியால்  இந்தியாவில் வருடந்தோறும் தோராயமாக  1,000 மரணங்கள் நடப்பதாக தெரிகிறது 

RTI ல் சரியான தகவல் பெற முயற்சிக்கிறேன் 


கொசுக்களை கட்டுப்படுத்த நீதிமன்றங்கள்  வழி வகைகள் சொல்ல முடியுமா ? அல்லது செய்ய முடியுமா ?


4)  தேள் கடியால்  இந்தியாவில் வருடந்தோறும் தோராயமாக  100 மரணங்கள் நடப்பதாக தெரிகிறது குறிப்பாக குழந்தைகள்.  RTI ல் சரியான தகவல் பெற முயற்சிக்கிறேன் 


தேள்களை கட்டுப்படுத்த நீதிமன்றங்கள்  வழி வகைகள் சொல்ல முடியுமா ? அல்லது செய்ய முடியுமா ?


சரிப்பா. 


1)  அரசாங்கத்திற்கு இல்லாத நிலமா (அல்லது) பணமா?  காப்பகங்களை எளிதில் உருவாக்கி விடுவார்கள் 

2)  பாம்பு, தேள், கொசு எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி விடுவார்கள்.   இப்பொழுது நாய்கள் மட்டும் தான் பிரச்சனை. 


இப்போது உன் பதில் என்ன என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.  அதையும் பார்ப்போம் 


நாய்களை சரியாக காப்பகத்திற்கு 100 அல்லது 150 என்று பிரித்து காப்பகத்தில் சேர்த்தாகிவிட்டது என்று வைத்து கொள்வோம்.  அடுத்தது என்ன நடக்கும் ??


சென்னையில் மட்டும் (நாடு முழுக்க எத்தனை என்று தெரியாது) தோராயமாக 3000 பிரியாணி கடைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.   தள்ளு வண்டி, சிறி ரக ஹோட்டல்கள், நடுத்தர ஹோட்டல்கள் என்று நிறைய இருக்கின்றன 


தெரு நாய்கள் இருந்தால் குறைந்தபட்சம் தள்ளு வண்டியில் சிக்கன் சூப், சிக்கன் பகோடா என்று சாப்பிடுபவர்கள் அங்கே இருக்கும் நாய்களுக்கு எஞ்சிய எலும்பு துண்டுகளை போட்டுவிடுவார்கள்.


இப்போது தெருவில் எந்த நாய்களுமே இல்லை என்றால் இந்த food waste எல்லாம் என்னவாகும்.   ஏற்கனவே இருக்கும் குப்பைகளுடன் இவையும் மலை போல் சேரும்.


உணவு சங்கிலி பாதிக்குமா என்று எனக்கு தெரியாது ஆனால் குப்பை மலை போல் சேர்வது உறுதி.   துப்புரவு பணியாளர்களின் நிலைமை இன்னும் மோசமாகும்.  


சரிப்பா இப்போது குப்பை எல்லாம் ஒரு பிரச்சனையா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.  பிரச்சனை அதோடு நிற்காது 


திருடர்கள் குறிப்பாக இரவு நேர திருடர்கள் எளிதாக உலா வருவார்கள்.  அவர்கள் காட்டில் அடை மழை பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது


சரிப்பா .  அதனால் என்ன ?   இதெல்லாம் ஒரு பிரச்சனையா ?  நாய்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குப்பைகள் சேரத்தான் செய்யும்.  கொள்ளை அடிக்கும் கும்பல் எப்படியாவது கொள்ளை அடிக்கத்தான் செய்யும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.  அடுத்து என்ன ?


ஊரில் உள்ள veterinary doctors தங்களது வருமானங்களை நிறையவே இழக்க நேரிடும்.  ஏனெனில் தெரு நாய்களை அவ்வப்போது அந்தந்த  பகுதிகளில் உள்ளவர்கள் ஒரு சிலர்  அவற்றை பேணி பாதுகாப்பவர்கள் உள்ளனர்.  அவற்றிற்கு உடல் நிலை சரி இல்லை அல்லது நோய் வாய் படும் போதும் அவற்றை அழைத்து வருவது வழக்கம் (இது veterinary hospital பக்கம் தலை வைத்து படுத்தவர்களுக்கு தெரியும்)


 சரிப்பா.  வருமான இழப்பு எல்லாம் ஒரு பெரிய விஷயமா ?  தினமும் 1000 ரூபாய் சம்பாதிப்பதற்கு பதில் 600 அல்லது 700 சம்பாதித்து விட்டு போகிறான்.  இதெல்லாம் ஒரு பிரச்சனையா ?  GST வருவாய்  குறைய வாய்ப்பு உள்ளது :-) அடுத்து என்ன ?


1)  காப்பகங்களில் உள்ள நாய்களை பாதுகாக்க எத்தனை veterinary doctors மற்றும் உதவியாளர்களை  நியமிப்பார்கள் ?  

2)  காப்பகங்களை எங்கே அமைக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

3)  அவற்றிற்கான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்படுமா என்று தெரியவில்லை.  குறிப்பாக அவைகளுக்கு blood bank இல்லை.  MRI scan இந்தியாவிலேயே இல்லை என்பது கூடுதல் தகவல் 


4)  எத்தனை government veterinary டாக்டர்கள் தமிழ்நாட்டில் உள்ளார்கள் என்று தெரியவில்லை.  தோராயமாக 81000 என்று தெரிகிறது.   எத்தனை பேர் காப்பகங்களுக்கு செல்ல விழைவார்கள் என்று தெரியவில்லை (அதாவது தூரம் கருதி)


உன்னுடைய தலைவலி தாங்க முடியவில்லையப்பா என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது 


இப்போது அனைத்தும் set ஆகிவிட்டன என்று வைத்து கொள்வோம்.  அதாவது  பாம்புகள் தொல்லை இல்லை. கொசு தொல்லை இல்லை.  தேள்களின் தொல்லை இல்லை.  காப்பகங்கள் இருக்கின்றன.  போதுமான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இருக்கிறார்கள்.  அனைத்து மருத்துவ வசதிகளும் இருக்கின்றன.  தெரு நாய்களுக்கு எந்த குறையும் இல்லாமல் நன்றாக இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம் 


அடுத்து என்ன நடக்கும் ??


இப்போது dog  breeders காட்டில் அடை மழை பெய்யும்.  


வீட்டில் breed dogs வளர்ப்பவர்கள் நிலைமை என்னவாகும்.  breed dog இறந்த பின்பு ஒரு வேளை அவர்கள் மனம் மாறி இனி தெரு நாய்களை தத்து எடுத்து வளர்க்கலாம் என்று நினைத்தால் கூட இனிமேல் வளர்க்க முடியாது.  ஏனெனில் தெருவில் நாய்களே இருக்காது.  அரசாங்கம் adoption program promote செய்தால் மட்டுமே இது சாத்தியப்படும் 



பாம்பு, தேள், கொசு தவிர யானை, சிங்கங்கள், புலிகள், மாடுகள்  தாக்கி ஆண்டு தோறும் சில ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.   ஆனால் இவை எல்லாம் கணக்கில் கொள்ளப்படவில்லை 


சரி.  என்ன தான் தீர்வு என்று கேட்டால் என் அறிவிற்கு எட்டிய ஒரு சில வழிகள் உள்ளன 


1)  shelterகளை உருவாக்குவது.  ஒரு காப்பகத்தில் 50 நாய்கள் மேல் வைத்தால் பராமரிக்க முடியாது 

2)  நம் தேசத்தில் எத்தனையோ petrol bunk உள்ளன.  ஒரு petrol bunkல் குறைந்தது 5-10 பேர் பணிபுரிவார்கள்.  ஒரு petrol bunkஇற்கு ஒரே ஒரு நாயை தத்து எடுத்து வளர்க்க கோரிக்கை வைக்கலாம். 

மேலே சொன்ன ரயில்வே ஸ்டேஷனிற்கும் பொருந்தும் 

3)  adoption program அரசாங்கம் promote செய்யலாம் 

4)  ஒரு wardக்கு ஒரு நாயை இருக்க அனுமதிக்கலாம்.  அந்தந்த வார்டுகளில் உள்ளவர்கள் அந்த ஒரு நாயை பார்த்து கொள்ள வேண்டும் 

5)  crowd funding மூலமாக தனியார் காப்பங்களுக்கு நிதி உதவி அளித்து அவற்றை விஸ்தரிக்க செய்வது 


இதை விட நல்ல வழி தெரிந்தவர்கள் சொல்லலாம்.  இன்னும் எழுத நிறைய இருந்தாலும் இதுவே போதும்  என்று கூறி எனது இந்த பதிவை முடிக்கிறேன் 


நன்றி 

சதிஷ் 


No comments:

Post a Comment

நாய்களுக்கு பிழைப்பா (அல்லது) நாய் பிழைப்பா? உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பாதகங்கள் என்னென்ன ?

தெரு நாய்களின் மீதான சமீபத்திய தீர்ப்பு மாற்று கருத்து உள்ளர்வர்கள் இடையே ஆதரவும் விலங்குகள் நல ஆர்வலர்களின் எதிர்ப்பையும் பெற்று இருக்கிறது...