Wednesday, September 3, 2025

குரலற்றவரின் குரல்கள் ஒளிக்குமா ? - நீயா - நானா

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பான நீயா - நானா பற்றிய பதிவு இது.  மிகவும் திறம்பட ஜோடிக்கப்பட்ட நிகழ்ச்சி அது


சமீபத்தில் நடந்த நிலச்சரிவில் இருந்து 67 உயிர்களை தெரு நாய் தான் காப்பாற்றியது என்பதை நினைவுபடுத்தி பதிவை ஆரம்பிக்கிறேன் 


என்னால் முடிந்த அளவு தகவல்களை சேகரித்து கொடுத்து உள்ளேன் 


நாய்கள் இருக்க கூடாது என்பவர்களுக்கு சில தகவல்கள் 


1)  வெறும் electrical issuesல் மட்டும் வருடந்தோறும் நம் தேசத்தில் 13000 இறப்பதாக சொல்லப்படுகிறது.  இதற்கு காரணமானவர்களை என்ன செய்ய வேண்டும் ? 


இதற்க்கு JE காரணமா ? AE காரணமா ?  CE காரணமா ?  வேறு யாரேனும் higher official காரணமா ?  அல்லது துறை மந்திரி காரணமா ?  


இவர்களில் யாராவது ஒருவரை கேள்வி கேட்கும் தைரியமும், துணிவும் உண்டா ? நாய்களிடம் காட்டும் கோபத்தை இவர்களிடம் காட்ட முடியுமா ?


2)  பாம்புகளால் 58000 உயிர்கள் பலியாகுகிறார்கள்.  அதுவும் ராஜ நாகம் இருப்பதால் தான் இந்த எண்ணிக்கை.  இல்லை என்றால் இது வருடந்தோறும் 70000த்தை தாண்டும் 


3)  சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும்  ஏன் கொசுவை ஒழிக்க முடியவில்லை ?  வருடந்தோறும் சுமார் 300 நபர்கள் டெங்குவால் மட்டும் இறப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது 


4)  இது தவிர இன்னும் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.  இவையும் ஆண்டு தோரும் சில 1000 உயிர்களை கொல்கின்றன 

        1.  சிங்கங்களால் உயிர் இழத்தல் 

        2.  புலிகள் தாக்கி உயிர் இழத்தல் 

        3.  யானைகள் மிதித்து உயிர் இழத்தல் 

        4.  முதலைகளால் உயிர் இழத்தல் 

        5.  ஆடு, மாடுகள் இன்னும் பிற விலங்குகள் தாக்குவதால் ஏற்படும் உயிர் இழப்புகள் 


நீங்கள் நாய்களை கருணை கொலை செய்து கொள்ளுங்கள்.  பரவாயில்லை.   


நாய்கள் இல்லை என்று ஆனவுடன் மேல் சொன்னவற்றில் எதையாவது உங்களால் சரி செய்ய முடியுமா ?  ஏதேனும் தீர்வு உள்ளதா என்பதை கூறினால் நன்றாக இருக்கும் 


நாய்கள் இருக்க கூடாது என்பவர்களுக்கு சில பதில்கள் 


கேள்வி:  dog lovers அவர்கள் வீட்டிலேயே நாய்களை வளர்த்து கொள்ளலாமே ?


பதில்:  இது flat மற்றும் வாடகை வீட்டில் குடியிருக்கும் dog lovers செய்ய விரும்பினாலும் flat owners மற்றும் house owners ஒப்புக்கொள்வதற்கு வாய்ப்பே இல்லை


              இரண்டாவது காரணம் பணம் மற்றும் இடம் வேண்டும்.  வீட்டில் 10 அல்லது 15 நாய்களை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்றால் மாத செலவிற்கு குறைந்தபட்சம் 10,0000 பணம் வேண்டும்.   2 அல்லது 3 நாய்களை வேண்டுமானால் dog lovers தத்து எடுத்து வளர்த்து கொள்ளலாம்.  வளர்க்க வேண்டும் என்பதே என் எண்ணம் 


நாய்கள் வேண்டாம் என்று சொல்பவர்கள் எந்த அடிப்படையில் இந்த கேள்வியை எழுப்பினார்கள் என்று தெரியவில்லை.  dog lovers வீட்டில் நாய்கள் தத்து  எடுக்கப்படவில்லை என்று எப்படி இவர்களுக்கு தெரியும் ?



கேள்வி:  dog loversன் வீட்டு பிள்ளைகளை கடித்தால் தெரியும்  ?


பதில்:  எந்த dog loverம் அடுத்தவன் பிள்ளைகளை கடித்து குதற நாய்களை தயார் படுத்துவது இல்லை.  மாறாக பிரச்சனையை அனைத்து dog lovers உணர்ந்து அதை ஏற்று கொண்டுதான் உள்ளார்கள்.  பாதிக்கப்படாத வகையில் தீர்வு ஏற்படவேண்டும் என்றே சொல்கிறார்கள் 


நாய்கள் இருக்க கூடாது என்பவர்களுக்கு சில கேள்விகள் 


1)  நாய்கள் இருக்க கூடாது என்கிறீர்கள் சரி.    தீர்வு என்று எதை சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாக சொன்னால் என்னை  போன்றவர்களுக்கு புரியும் 


2)  நாய்கள்  இல்லாமல் செய்தால் எலிகள் வரும் அல்லது வேறு ஏதேனும்  விலங்குகள் அதை நிரப்பும்.  இதற்க்கு என்ன தீர்வு உள்ளது ?


3)  நாய்களால் மட்டும் இல்லை பூனைகளாலும் rabbies பரவ வாய்ப்பு உள்ளது ?   அடுத்து பூனைகளை எப்படி கட்டுப்படுத்துவீர்கள் ?


சுமூக தீர்வுகளே நிறைய உள்ளன.  ஆனால் தீர்வுகள் பேசப்பட கூடாது, பிரச்சனைகள் மட்டுமே பேசபட வேண்டும் என்று நிகழ்ச்சி தயார் செய்திகவர்களின் திண்ணமான எண்ணமே தெள்ளத்தெளிவாக வெளிப்பட்டது 


நன்றி 

சதீஷ் 




No comments:

Post a Comment

Voice of Voiceless - Neeya Naana - Reckless debate

 This is a post about Neeya - Naana that aired last Sunday. It was a very effectively staged show I will start the post by reminding you tha...