செயற்கை கருத்தரிப்பு முறை - IVF
நோய் நாடி நோய் முதல் நாடி என்பது நம் முன்னோர்கள் வாக்கு.
விஞ்ஞானம் என்பது நம்முடைய அன்றாட வாழ்வில் நமக்கு பெருமளவு உபயோகமானதாக இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் அதே நேரத்தில் விஞ்ஞானம் சர்வ ரோக நிவாரணி அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
இப்போது மீண்டும் முந்தைய பதிவில் பதிந்த கேள்வியை பார்ப்போம்
கேள்வி: 30 அல்லது 32 வயதிற்கு மேல் திருமணம் செய்து யாரும் இயற்கையாக பிள்ளை பெறாமலா இருக்கிறார்கள் ?
பதில்: இதற்கு சுருக்கமான பதில் என்னவென்றால் அவரவரின் உடல் சம்பந்தப்பட்ட விஷயம் இது. ஆங்கிலத்தில் 'no two bodies are same' என்று சொல்வார்கள் அல்லவா.
கொஞ்சம் விரிவாக சொல்லவேண்டும் என்றால் ஆண் விந்துவின் பலத்தை பொருத்தும், பெண் கருமுட்டையின் (follicle) தரத்தை பொறுத்தது. வயது ஆக ஆக, ஆண் விந்துவின் தரமும் பெண் கருமுட்டையின் தரமும் குறைந்து கொண்டே வரும் என்பது இயற்கை நியதி
செயற்கை கருத்தரிப்பு முறை (IVF) ஏன் தேவைப்படுகிறது என்பதை மனதில் வைத்தே நாம் 'அக' மற்றும் 'புற' காரணங்களை கடந்த இரண்டு பதிவ்வுகளில் ஆராய்ந்தோம்
'குழலினித யாழினி தென் தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர' என்ற பாரதியின் பாடல் குழந்தை செல்வத்தின் அருமையை நமக்கு உணர்த்துகிறது
குழந்தை அற்றவர்களுக்கு செயற்கை கருத்தரிப்பு IVF) முறை ( கிட்டத்தட்ட ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும்
IVF முறையின் சாதக,பாதகங்களை பற்றி பார்க்கும் முன் இந்த சமுதாயம் அல்லது மக்கள் IVF மருத்துவமனைக்கு செல்பவர்களை பற்றி கொண்டுள்ள சில தவறான கண்ணோட்டங்களையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. அவற்றுள் சில
1) IVF மருத்துவமனைக்கு செல்லும் ஆண்கள் ஆண்மையற்றவர்கள் அல்லது ஆண்மை குறைபாடுள்ளவர்கள்
2) IVF மருத்துவமனைக்கு செல்லும் பெண்களை பற்றி நாம் விவாதிக்க வேண்டிய அவசியமே கிடையாது
இயற்கையாகவே ஆண்களை விட பெண்களுக்கு குழந்தை உருவாகாமல் இருக்க பல காரணங்கள் உள்ளது . நான் மருத்துவன் இல்லை என்றாலும் கீழே குறிப்பிட்டுள்ள காரணங்கள் அனைவரும் அறிந்ததே
1) குறைந்த அளவு ரத்தத்தால் மாதவிடாய் சரியாக வரமால் இருத்தல்
2) கர்ப்பப்பைக்கு (uterus) சரியான அளவில் இரத்தம் செல்லாமல் இருத்தல் அல்லது சரியான அளவில் (size) இல்லாமல் இருத்தல்
3) Laparascopy போன்ற major surgery (பொதுவாக) இதற்க்கு முன்னர் அவர்களுக்கு செய்யப்பட்டு இருந்தாலும்
4) இரண்டு ovaryகளில் ஒன்றில் குறை இருந்தாலோ அல்லது ஒரு ovaryயே இல்லாமல் இருத்தல் போன்ற நிறைய காரணங்கள் இருக்கின்றன
மனித உடல் அமைப்பு rocket science விட complexity நிறைய என்பதால் எல்லாவற்றையும் அலசி ஆராய வேண்டும்.
ஆகவே, IVF மருத்துவமனைக்கு செல்பவர்களை ஆண்மையற்றவர்கள் என்றும் பெண்ணை பிள்ளை பெறமுடியாதவள் என்றும் ஒற்றை வரியில் நாம் சுருக்க கூடாது என்பதே என் தாழ்மையான கருத்து
நாளைய பதிவில் IVF முறையின் சாதக பாதகங்களை பற்றி பார்ப்போம்
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
நன்றி
No comments:
Post a Comment