செயற்கை கருத்தரிப்பு முறை - IVF
அந்த காலத்தில், பிறந்து 1 அல்லது 2 வயதே ஆன குழந்தைகளுக்கு திருமணம் செய்யும் மடமை இருந்தது எப்படி உண்மையோ அதே போன்று இந்த காலகட்டத்தில் 30 அல்லது 32 வயதிற்கு மேல் திருமணம் செய்வதும் ஒரு வகை மடமையே ஆகும் எனப்து என் கருத்து
இந்த காலத்தில் 30 அல்லது 32 வயதிற்கு மேல் திருமணம் செய்ய அக மற்றும் புற காரணிகள் நிறையவே இருக்கின்றன . உதாரணமாக சிலவற்றை பார்ப்போம்
1) நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம் என்று உபதேசிப்பது (அல்லது) ஓரளவிற்கு பணம் சேர்த்து விட்டு பின்பு திருமணம் செய்துகொள் என்று சொல்வது
2) திருமணம் செய்து கொண்டால் தங்கள் சுதந்திரம் பறிபோய்விடும் என்று நினைக்கும் பெண்கள்
3) திருமணம் செய்வதே பெண்ணடிமைத்தனம் என்று தவறாக போதிக்கும் பகுத்தறிவு கூட்டம் (???)
4) அடியோடு மாறிவிட்ட உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உணவின் தரம்
5) இந்த காலத்தில் ஆண்களுக்கு பெண் கிடைப்பது சற்று கடினமாக இருக்கிறது.
90s kids என்று அழைக்கும் அளவுக்கு இன்றைய சூழல் உள்ளது என்பன போன்று நிறைய காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்
இன்று பட்டிமன்றங்கள் மற்றும் மேடைகளில் பேசுபவர்கள் பகுதிக்கு (area) ஒரு செயற்கை கருத்தரிப்பு மையம் (IVF) வந்துவிட்டது என்று சொல்வதை நம்மால் பார்க்க முடிகிறது
இதில் வேடிக்கை என்னவென்றால் பெண்ணுக்கு குழந்தை பிறக்க தாமதமானாலோ அல்லது குழந்தை பிறக்கவில்லை என்றாலோ அந்த பழி default ஆக பெண்ணின் மீதே விழுகிறது.
சரி. இப்போது 30 அல்லது 32 வயதிற்கு மேல் திருமணம் செய்தால் என்ன? குடியா மூழ்கிவிடும்? 30 அல்லது 32 வயதிற்கு மேல் திருமணம் செய்து யாரும் இயற்கையாக பிள்ளை பெறாமலா இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது
செயற்கை முறை கருத்தரிப்பு அல்லது IVF முறையின் சாதக, பாதகங்கள் மற்றும் இந்த முறை எத்தனை சதவிகிதம் வேலை செய்யும் என்பதையும் என்னால் முடிந்த அளவுக்கு விவரிக்கிறேன்
அடுத்த பதிவில் தொடருவோம்
நன்றி
No comments:
Post a Comment