Thursday, December 31, 2020

செயற்கை கருத்தரிப்பு முறை (IVF) - பரிணாம வளர்ச்சியா ? பகுத்தறிவு மடமையா ? - 1

செயற்கை கருத்தரிப்பு முறை (IVF)- பின்னோக்கி ஒரு சிறு பயணம் 


1980, 90 காலகட்டங்களில் வெளியான நிறைய திரைப்படங்களில்  முதல் காட்சி  கிட்டத்தட்ட கீழே குறிப்பிட்டுள்ளதை படமாக்கப்பட்டு இருக்கும் 


அதாவது, ஹீரோ மொட்டை மாடியில் தனியாகவோ அல்லது அவர்களுடைய நண்பர்களுடனோ தூங்கி கொண்டுயிருப்பார்.  


ஹீரோவுடைய அம்மாவோ அல்லது தங்கையோ ஹீரோவுக்கு காபி கொண்டு வந்து ஹீரோவை எழுப்புவாள்.  ஹீரோ காபி குடிக்கும் போது பின்னணியில் 'சுப்ரபாதத்தோடு'  வீட்டு  பின்புறத்தில் இருக்கும் தண்டவாளத்தில் 'ரயிலகளை ரசித்தபடியம்  ஹீரோ காபி அலலது தேநீரை பருகுவார் 


அந்த காலத்தில் இது ஒரு Trademark காட்சி  என்றே சொல்ல வேண்டும்


இது ஏதோ சினிமாவில் வரும் ஒரு காட்சி போல் தோன்றினாலும், நாம் சற்றே யோசித்து பார்த்தோமேயானால்  1980, 90 காலகட்டங்களில் நம் இல்லங்களில் இதுவே நடைமுறையாக இருந்தது 


வீடுகளில் நம் அம்மா காலையில் எழுந்து கோலமிட்டு, தேநீர் தயார் செய்த,  கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு காலை மற்றும்  மதிய உணவு  தயார் செய்து நம்மை அனுப்பி வைப்பார் 


1990களுக்கு பிறகு நமது வாழ்க்கை முறை நிறையவே மாறி விட்டது என்பது கண்கூடு. அவற்றில் ஒரு சில வற்றை கீழே குறிப்பிட்டுள்ளேன் 


1)  இந்த காலத்தில் கணவன் மற்றும் மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் இருவருக்கும் 24 மணி நேரம் போதவில்லை என்றே சொல்லவேண்டும் 

2)  இப்போது பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே (கட்டாயமாக) காலை உணவு பரிமாறப்படுகிறது

3)  கணவர்களுக்கு அலுவலகத்திலேயே canteen வசதி உள்ளது


1980, 90 காலகட்டங்களை இப்போது நினைவு கூற தேவை என்னவென்றால், இன்னும் 20-30 வருடங்கள் கழித்து என்னுடைய எழுத்துக்களை யாரேனும் படித்து பார்த்தால் அவர்களுக்கு இது ஒரு 'கலாச்சார தகவலாக' மட்டுமே இருக்கும் என்பதே யதார்த்தமான உண்மையாக இருக்கும் 


செயற்கை முறை கருத்தரிப்பு (IVF)  என்று தலைப்பை போட்டு விட்டு எதையோ, எதையோ எழுதிக்கொண்டு இருக்கிறானே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது 


செயற்கை முறை கருத்தரிப்பு அல்லது  IVF முறையை விஞ்ஞான ரீதியாக மட்டும் அணுகாமல் நமது கலாச்சாரம், சமுதாயம் மற்றும் வாழ்வியல் முறைகளில் சேர்த்தே பார்க்க வேண்டும் என்பது திண்ணம்.  இந்த விஷயம் இந்த கட்டுரையின் இறுதியில்  அனைவருக்கும் புரியும் என்று நம்புகிறேன்


அடுத்த பகுதியில் மீண்டும் விரைவில் சந்திப்போம் 


தொடரும்  

No comments:

Post a Comment

நாட்டு நாய்களை காப்பாற்றுங்கள்

 இக்கட்டுரையை படிப்பவர்கள் இனிமேல் தயவு செய்து 'தெரு நாய்கள்' என்று அழைக்கவேண்டாம்.   'தெருவில் வசிக்கும் நாய்கள்' என்று அழை...