இது முந்தைய பதிவின் தொடர்ச்சி
சென்ற பதிவில் முதல் இரண்டு வரிகளை பார்த்தோம். இந்த பதிவில் அடுத்த இரண்டு வரிகளை பற்றி பாப்போம்
3ம் வரியின் முதல் வார்த்தை பதவியை மய்யமாக கொண்டும், 4ம் வரியின் முதல் வார்த்தை நேரடியாக சமஸ்க்ரித தெய்வமான 'வருணனை' தொல்காப்பியர் பயன்படுத்தி உள்ளார்
| தமிழில் பொருள் | சமஸ்க்ரித தெய்வம் | சமஸ்க்ரிதத்தில் சொல்லப்பட்ட பொருள் |
வேந்தன் | அரசன், தலைமை பதவி | இந்திரன் | இந்திரன் தேவர்களின் தலைமை |
வருணன் | எதுவும் இல்லை | வருணன் | நேரடியாக வேத கால தெய்வமான |
குறிப்பு: 'வரு' என்பது சமஸ்க்ரித மொழியை சேர்ந்தது. தொல்காப்பியர் 'வருணன்' என்கிற சமஸ்க்ரித சொல்லை தான் இங்கே நேரடியாக உபயோகப்படுத்தியுள்ளார் என்பது மிகவும் கவனம் பெறுகிறது
தொல்காப்பியர் நினைத்து இருந்தால் 'வருணனுக்கு' இணையான வேறு வார்த்தைகளை (உதாரணமாக கடலோன் என்பன போன்ற) பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் தொல்காப்பியர் இந்த செய்யுளில் அவ்வாறு செய்யவில்லை
மேலோட்டமாக பார்த்தால் தமிழ் மட்டுமே தெரியும் இச்செய்யுளில் கொஞ்சம் கவனமாக பார்த்தல் தமிழுக்கும், சமஸ்க்ரிதத்துக்கும் தொடர்பு இருப்பது ஓரளவுக்கு புலப்படுகிறது
ஆக என்னுடைய இறுதி கருத்து
1) 'நிறத்தை' வைத்து முதல் 2 வாக்கியங்கள் சமஸ்க்ரித தெய்வத்தோடு ஒத்துப்போகிறது
2) 'பதவியை' வைத்து 3வது வாக்கியம் சமஸ்க்ரித தெய்வத்தோடு ஒத்துப்போகிறது
3) 4வது வாக்கியத்தில் நேரடியாக சமஸ்க்ரித தெய்வமே பயன்படுத்த பட்டு இருக்கிறது
மேற்சொன்ன மூன்று விடயங்களை வைத்து பார்த்தல் 'முருகன் கடவுளே' என்பது புலப்படுகிறது. முப்பாட்டன் அல்லது மனிதன் என்பதற்கு தொல்காப்பியர் இந்த செய்யுளில் எந்த குறியீடும் சொல்லவில்லை.
அடுத்த பதிவில் சந்திப்போம்
நன்றி
சதீஷ் குமார்