Sunday, July 26, 2026

முருகர் முப்பாட்டனா அல்லது தெய்வமா - ஒரு மாறுபட்ட கோணம் - 1


முருகர் முப்பாட்டனா அல்லது கடவுளா ?


முருகன் முப்பாட்டன் அல்லது குல தெய்வம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள் இல்லை முருகர் தமிழ் கடவுளே என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்


இந்த கட்டுரையின் நோக்கம் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டுள்ள பாடலில் உள்ள உண்மையை புரிந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சியே


ஏனெனில் தொல்காப்பியம் தான் தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் நூல். தொல்காப்பியத்தில் முருகனை பற்றி குறிப்பும் உள்ளதால் நாம் நம் பயணத்தை அங்கே இருந்து தொடங்குவோம்


எனக்கு தெரிந்து தொல்காப்பியத்தை ஆரிய திணிப்பு செய்து விட்டார்கள் என்றோ திரிப்பு நடைபெற்றுவிட்டது என்று சொல்ல மிகவும் வாய்ப்பு குறைவு


தொல்காப்பிய பாடல் என்ன சொல்கிறது என்று பாப்போம். இந்த பாடலை மேலோட்டமாக பார்த்தல் அனைத்தும் தமிழில் நேரடியாக உள்ளது போல் தோன்றும். என்னால் இயன்றவரை வேறு ஒரு கோணத்தில் இதை அணுக முயற்சித்து இருக்கிறேன் (தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும், அவை திருத்தப்படும்)


மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்


இந்த பாடலில் முதல் 2 வரிகளில் உள்ள முதல் வார்த்தையை எடுத்துகொள்வோம். தமிழும், சமஸ்க்ரிதமும் நிறையவே ஒத்து போவதை பார்க்க முடிகிறது.


 

தமிழில் சொல்லப்பட்ட தெய்வம்

தமிழ் சொற்கள்

தமிழில் பொருள்

சமஸ்க்ரித தெய்வம்

சமஸ்க்ரிதத்தில் சொல்லப்பட்ட கடவுளின் நிறம்

மாயோன் 

திருமால் 

  'மாய்',
'மாயம்'

கருப்பு

விஷ்ணு

கருநீலம் / கருமை கலந்த நீலம்

சேயோன்

முருகன்

சிவப்பு, செந்நிறம்

சிவப்பு

சுப்ரமணியன், கார்த்திகேயன்

சிவப்பு


உதாரணமாக:

शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम्
विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गम्

என்ற விஷ்ணு தியான சுலோகத்தில்:


मेघवर्णम् (megha-varṇam) = மேகம் போன்ற நிறமுடையவர் என்று கூறப்படுகிறது.


இப்போது இந்த பாடலில் இரண்டாவது வரியில் உள்ள முதல் வார்த்தையை எடுத்துகொள்வோம்.


सिन्दूरारुणकान्तिं शिखिवाहनमव्ययम् ।
शक्तिहस्तं महावीर्यं स्कन्दं वन्दे षडाननम् ॥


सिन्दूरारुण (sindūrāruṇa) என்றால் சிவந்த நிறமுடைய என்று பொருள் படுகிறது


முதல் இரண்டு வரிகளில் தொல்காப்பியர் நிறத்தை மைய்யப்படுத்தி தமிழ் தெய்வங்களை குறிப்பிட்டு உள்ளார். நிறத்தின் அடிப்படையில் பார்க்கும் போது தொல்காப்பியரின் தமிழ் தெய்வங்கள் சமஸ்க்ரித தெய்வங்களோடு ஒத்து போகிறது


குறிப்பு: விஷ்ணுவின் நிறம் மற்றும் முருகனின் நிறம் பிற்காலத்தில் வந்த புராணங்களில் சொல்லப்படுகிறது. ரிக் வேதத்தில் 1,52,222 பாடல்கள் உள்ளதால் விஷ்ணு மற்றும் முருகனின் நிறத்தை பற்றிய குறிப்பு உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை


நிறத்தின் அடிப்படையிலேயே தொல்காப்பியர் முதல் ரெண்டு வரிகளை எழுதி உள்ளார் என்பது என்னுடைய கருத்து. ஏனெனில் முருகனுக்கும் பல பெயர்கள் உண்டு (வேலன், குமரன்), மாயோனுக்கும் (மால்) தமிழிலேயே வேறு சில பெயர்களும் உண்டு.


தொல்காப்பியர் நினைத்து இருந்தால் முருகன் மற்றும் மாயோனுக்கு இருக்கும் வேறு பெயர்களை பயன்படுத்தி பாடல் தாரளாமாக வெவேறு வார்த்தைகளை பயன்படுத்தி செய்யுளை வேறு மாதிரி எழுதி இருக்கலாம். ஆனால் தொல்காப்பியர் அவ்வாறு செய்யவில்லை என்பது என்னுடைய கருத்து.


அடுத்த பதிவில் சந்திப்போம்


நன்றி

சதீஷ் குமார்

No comments:

Post a Comment

முருகர் முப்பாட்டனா அல்லது தெய்வமா - ஒரு மாறுபட்ட கோணம் - 2

இது முந்தைய பதிவின் தொடர்ச்சி சென்ற பதிவில் முதல் இரண்டு வரிகளை பார்த்தோம் . இந்த பதிவில் அடுத்த இரண்டு வரிகளை பற்றி பாப்போம...