Monday, January 11, 2021

செயற்கை கருத்தரிப்பு முறை (IVF) - பரிணாம வளர்ச்சியா ? பகுத்தறிவு மடமையா ? - 5

செயற்கை கருத்தரிப்பு முறை - IVF

 செயற்கை கருத்தரிப்பு முறை (அல்லது) IVF குழந்தை அற்றவர்களுக்கு ஒரு வரம் என்று முந்தைய பதிவுகளில் சொல்லி இருந்தேன்


ஆனால், வரம் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே?  என்ன தான் கடும் தவம் செய்தாலும் கடவுள் நினைத்தால் தானே வரத்தை கேட்டு பெற முடியும் மேலும் நாம்  வரம் பெற, அதற்கான விலையை கொடுத்து தானே ஆகவேண்டும்.



1)  IVF முறையின் மூலம் குழந்தை பெறுவது சாத்தியமென்றாலும் கூட இம்முறையின் மூலம் கருவை உருவாக்க 45% மட்டுமே சாத்தியமாகும்.


ஏன் அப்படி  என்றால் பெண்களின் கருப்பையில் உள்ள கருமுட்டைகளின் எண்ணிக்கை, கருமுட்டைகளின் தரம், ஆண் விந்தணுவின் தரம் இவற்றை எல்லாம் பொறுத்தே கரு உருவாகும் வாய்ப்பு உள்ளது 


30 அல்லது 32 வயதை கடந்தவர்களுக்கு மாதவிடாய் எப்பொழுதும் போல் வந்தாலும், கருமுட்டைகளின் தரம் பற்றி தெரிந்து கொள்ள வழியில்லை.  இந்த வயதில் உள்ள பெண்களுக்கு  மாதவிடாய் காலத்தில், கருமுட்டை வெளியில் வந்தாலும் அது  'matured ' ஆக  இல்லையென்றால் ஆணின் விந்தை அதனால் ஈர்க்க முடியாது (attraction process)


எனக்கு தெரிந்து தற்போது உள்ள மருத்துவ முறைகளின்படி கருமுட்டைகளின் தரத்தை (egg quality) மெருகேற்ற (improve) முடியாது.  கருமுட்டைகளை வெளியே எடுத்து fertilization (அதாவது ஆணின் விந்தை பெண்ணின் கருமுட்டையோடு சேர்த்தல்) செய்தால் மட்டுமே கருமுட்டைகளின் 'quality' மருத்துவர்களுக்கே தெரியவரும் 


2)  பெண்களுக்கு uterusல் எந்த பாதிப்பும் இல்லை என்று சோதித்து பார்த்த பின்னரே சிகிச்சை தொடங்கப்படும்.  uterusல் ஏதேனும் பாதிப்பு இருந்தால் முதலில் அதை சரி செய்ய தனியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் 


3)  செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்று கொள்ளவேண்டுமெனில் பெண்களுக்கே அனைத்து விதமான சிகிச்சைகளும் அளிக்கப்படும்.  ஆண்களை பொறுத்தவரை ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகளை விழுங்க வேண்டியிருக்கும்.


4)  IVF முறையின் மூலம் குழந்தை பெற வேண்டுமாயின் நாம் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும்.  IVF என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனி என்பதே கசப்பான உண்மை 


5)  IVF முறையில் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்கிற முறையும் உள்ளது.  அதெப்படி சாத்தியம் ?  வெறும் 45% சதவிகிதம் தானே சாத்தியம் என்று தானே சொல்லி இருக்கிறேன்.


ஒரு வேளை பெண்ணின் கருமுட்டையின் தரம் சரியில்லை என்னும் பட்சத்தில் வேறொரு இளவயது  பெண்ணின் கருமுட்டையை (egg donor) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பொறுத்துவார்கள்.  இம்முறையின் மூலம் கரு நிச்சயம் உருவாகும் 


6)  IVF முறையில் மேலும் ஒரு பாதக அம்சம் உள்ளது அதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்


மேலே சொன்ன தகவல்களை எல்லாம் இதை படிப்பவர்கள் மருத்துவர்களிடம் தாராளமாக  பரிசீலித்து கொள்ளலாம் .  IVF முறையில் குழந்தை நிச்சயம் என்று நீங்கள் நினைத்து இருந்தீர்கள் என்றால், அதை மாற்றி கொள்ளுங்கள் 


அழகு, பணம், ஆஸ்தி, அந்தஸ்து எல்லாவற்றையும் பாருங்கள்.  வேண்டாம் என்று சொல்லவில்லை.  அதன் கூடவே உங்கள வயதையும் சேர்த்து எண்ணி பாருங்கள். 

 அது மட்டுமன்றி பெண்கள், 'டுபாக்கூர் பகுத்தறிவாதிகள்' மற்றும் 'போலி பெண்ணடிமைவாதிகள்' போன்றவர்களிடம் சிக்காமல் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள் 


அரசாங்கம் சொல்லும் வயதில்  திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்றாலும் ஓரளவிற்கு முயற்சித்து கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்பதே என் தாழ்மையான கருத்து 


பகுத்தறிவு என்பதே நாம் அனைத்து விஷயங்களிலும் விருப்பு-வெறுப்பு அற்று யோசித்து உண்மையை உணர்ந்து  அதன்படி நடந்து கொள்வதே ஆகும்.  IVF என்பது ஒருவகை பரிணாம வளர்ச்சி என்றாலும் கூட, அதன் சாதக பாதக உணர்ந்து IVFஐ முடிந்த அளவு தவிர்ப்பதே நமக்கு நன்மையாகும் 


மழலை செல்வத்தை பெற்று அனைவரும் இன்புற்று இருக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்தித்து கொள்கிறேன் 


வேறு ஒரு தலைப்பில் அடுத்த பதிவில் சந்திப்போம் 


நன்றி 

No comments:

Post a Comment

Voice of Voiceless - Neeya Naana - Reckless debate

 This is a post about Neeya - Naana that aired last Sunday. It was a very effectively staged show I will start the post by reminding you tha...