திமுக தேர்தல் அறிக்கையில் வழக்கம் போல் 'வக்பு' நிலங்கள் ஜமாத்துகளிடமும், சர்ச் நிலங்கள் அந்தந்த
சர்ச்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளது
ஆனால் கோவில் நிலங்கள் ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது என்ன மாதிரியான secularism என்று புரியவில்லை
உதாரணமாக தமிழ்நாட்டில் ஏறக்குறைய 32,000 கோவில்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு வாதத்திற்கு 5000 சைவ (சிவன்) கோவில்களும், 5000 வைணவ (பெருமாள் ) கோவில்களும் இருப்பதாக வைத்து கொள்வோம். திராவிட கோட்பாட்டின் படி சமூகம் சந்திக்கும் அதனை பிரச்சனைகளுக்கும் "ஐயர் மற்றும் ஐயங்கார்களே" காரணமாவதால் இந்த 10,000 கோவில் நிலங்களை அவர்கள் பகிர்ந்து அளித்து சமத்துவத்தை நிலைநாடட்டும்
ஆனால் மீதி உள்ள 22,000 கோவில்கள் சிறுதெய்வ மற்றும் குலதெய்வ கோவில்களுக்கு சொந்தமானது. இந்த கோவில்களின் நிலங்களை "கூறு போட்டுவிட்டால்" குலதெய்வ மற்றும் சிறுதெய்வ வழிபாடுகளை தெருவில் நின்றா செய்யமுடியும் ?
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டின் சின்னமே 'கோபுரம்' தான். இதே ரீதியில் சென்றால் அடுத்த 10 ஆண்டுகளில் கோவில்களே இல்லாத தமிழகமாக மாறப்போவது உறுதி போல் தோன்றுகிறது
பின்குறிப்பு:- இந்த கோவில்கள் எல்லாம் ஒன்றும் கழக ஆட்சியில் கட்டப்பட்டவை அல்ல
No comments:
Post a Comment