திருக்குறள் உலக பொதுமறையா ?
திருவள்ளுவரை பற்றியும் திருக்குறளை பற்றியும் பல்வேறு விதமான தகவல்கள் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.
நானறிந்தவரை 'திருக்குறளில்' உள்ள 1330 குறள்களும் ஒரே நாளில் எழுதப்பட்டவை அல்ல. அது மட்டுமன்றி இன்னும் பல குறள்கள் அழிந்து போயின என்றும் கூறப்படுகிறது
திருவள்ளுவர் சமண மதத்தை சேர்ந்தவர் என்றே பொதுவாக கருதப்படுகிறது. அவர்கள் கூற்றுப்படியே வருவோம்
கற்பனையாக வரையப்பட்ட 'திருவள்ளுவர்' படத்தில் அவர் தலையில் 'கூந்தல் மற்றும் தாடி, மீசையுடன்' இருக்கிறார்
ஆனால்,கேள்வி என்னவென்றால், சமணர்கள் எப்போது தலையில் 'முடி வைத்து' கொண்டார்கள் என்று தெரியவில்லை. இதற்க்கு யாரேனும் பதில் அளித்தால் தெரிந்து கொள்ளலாம்
குறிப்பு:- திருவள்ளுவருக்கு 'காவி உடை' தரித்தாற்போன்று புகைப்படம் வெளியிட்டவுடன் அவருக்கு 'காவி சாயம்' பூச முயலுகின்றனர் என்று கண்டன குரல்கள் எழுந்தது நாம் அனைவரும் அறிந்ததே
திருக்குறள் பற்றிய ஒரு சில சந்தேகங்கள் (அல்லது) கேள்விகளை கீழே தொகுத்து உள்ளேன். விடை தெரிந்தவர்கள் தாராளமாக சொல்லலாம்
கேள்வி 1 - தமிழர்களுக்கு மதம் இல்லை அல்லது தமிழர்கள் தனி இனம் என்று சொல்பவர்கள் திருவள்ளுவரை சமண மதத்தை' சேர்ந்தவர் என்று சொல்வது ஏன் ? இது கொஞ்சம் வியப்பாக உள்ளது
கேள்வி 2:- "திருக்குறளும் ஆரியகுரலே" என்கிற நூல் ஈவேராவால் எழுதி வெளியிடப்பட்டது என்பது நமக்கு தெரிந்ததே
ஆரியத்தை சுமந்து நிற்கும் 'திருக்குறள்' எப்படி 'உலக பொதுமறை' ஆகும் என்பதே என்னுடைய கேள்வி ? ஏனென்றால் 'ஆரியர்கள்' வேறு 'தமிழர்கள்' வேறு தானே ?
ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக உள்ளே வந்து 'தமிழர்களை' அடிமைப்படுத்தியவர்கள் தானே ? அப்படி இருக்கையில் திருக்குறளை 'உலக பொதுமறை' என்று ஏற்று கொள்ளமுடியுமா ?
.கேள்வி 3 - திருவள்ளுவர் 'சமண மதத்தை' சேர்ந்தவர் என்பது உண்மையானால் 'இந்திரன்', 'திருமால்', 'ஸ்ரீதேவி' போன்ற குறள்கள் ஏன் இருக்கின்றன ?
அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்
நன்றி
No comments:
Post a Comment