Saturday, April 24, 2021

நண்பனும் நானே எதிரியும் நானே

என்னை விட உனக்கு  சிறந்த நண்பனும் இல்லை எதிரியும் இல்லை 


                                                                        இப்படிக்கு
சூழ்நிலை


ஆறு மனமே ஆறு

 மனவலிகளோடு வாழ்வதை விட மனக்குறைகளோடு வாழ்ந்துவிடலாம் 

Sunday, April 11, 2021

திருக்குறளும் அரசியலும் - திருக்குறள் உலக பொதுமறையா ?

திருக்குறள் உலக பொதுமறையா ? 


 திருவள்ளுவரை பற்றியும் திருக்குறளை பற்றியும் பல்வேறு விதமான தகவல்கள் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.  

நானறிந்தவரை 'திருக்குறளில்' உள்ள 1330 குறள்களும் ஒரே நாளில் எழுதப்பட்டவை அல்ல.  அது மட்டுமன்றி இன்னும் பல குறள்கள் அழிந்து போயின என்றும் கூறப்படுகிறது 

திருவள்ளுவர் சமண மதத்தை சேர்ந்தவர் என்றே பொதுவாக கருதப்படுகிறது.  அவர்கள் கூற்றுப்படியே வருவோம் 

கற்பனையாக வரையப்பட்ட 'திருவள்ளுவர்' படத்தில் அவர் தலையில் 'கூந்தல் மற்றும் தாடி, மீசையுடன்' இருக்கிறார் 

ஆனால்,கேள்வி என்னவென்றால், சமணர்கள் எப்போது தலையில் 'முடி வைத்து' கொண்டார்கள் என்று தெரியவில்லை.  இதற்க்கு யாரேனும் பதில் அளித்தால் தெரிந்து கொள்ளலாம் 

 குறிப்பு:-  திருவள்ளுவருக்கு 'காவி உடை' தரித்தாற்போன்று புகைப்படம் வெளியிட்டவுடன் அவருக்கு  'காவி சாயம்'  பூச முயலுகின்றனர் என்று கண்டன குரல்கள் எழுந்தது நாம்  அனைவரும் அறிந்ததே 


திருக்குறள்  பற்றிய ஒரு சில சந்தேகங்கள் (அல்லது) கேள்விகளை கீழே தொகுத்து உள்ளேன்.  விடை தெரிந்தவர்கள் தாராளமாக சொல்லலாம் 


கேள்வி 1 -  தமிழர்களுக்கு மதம் இல்லை அல்லது தமிழர்கள் தனி இனம் என்று சொல்பவர்கள் திருவள்ளுவரை சமண  மதத்தை' சேர்ந்தவர் என்று சொல்வது  ஏன்  ?  இது கொஞ்சம் வியப்பாக உள்ளது 


கேள்வி 2:- "திருக்குறளும் ஆரியகுரலே" என்கிற நூல் ஈவேராவால் எழுதி வெளியிடப்பட்டது என்பது நமக்கு தெரிந்ததே

ஆரியத்தை சுமந்து நிற்கும் 'திருக்குறள்' எப்படி 'உலக பொதுமறை' ஆகும் என்பதே என்னுடைய கேள்வி ?  ஏனென்றால் 'ஆரியர்கள்' வேறு  'தமிழர்கள்' வேறு தானே ?

ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக உள்ளே வந்து 'தமிழர்களை' அடிமைப்படுத்தியவர்கள் தானே ?  அப்படி இருக்கையில் திருக்குறளை 'உலக பொதுமறை' என்று ஏற்று கொள்ளமுடியுமா ?


.கேள்வி 3 -  திருவள்ளுவர் 'சமண மதத்தை' சேர்ந்தவர் என்பது உண்மையானால் 'இந்திரன்', 'திருமால்', 'ஸ்ரீதேவி' போன்ற குறள்கள் ஏன் இருக்கின்றன ?  


அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்


நன்றி 


Friday, April 2, 2021

கழகத்தின் கோவில் அரசியல் - கழகம் vs கோவில்

 திமுக தேர்தல் அறிக்கையில் வழக்கம் போல் 'வக்பு' நிலங்கள் ஜமாத்துகளிடமும், சர்ச் நிலங்கள் அந்தந்த சர்ச்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளது 

ஆனால் கோவில் நிலங்கள் ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது என்ன மாதிரியான secularism என்று புரியவில்லை 

உதாரணமாக தமிழ்நாட்டில் ஏறக்குறைய 32,000 கோவில்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு வாதத்திற்கு 5000 சைவ (சிவன்) கோவில்களும், 5000 வைணவ (பெருமாள் ) கோவில்களும் இருப்பதாக வைத்து கொள்வோம். திராவிட கோட்பாட்டின் படி சமூகம் சந்திக்கும் அதனை பிரச்சனைகளுக்கும் "ஐயர் மற்றும் ஐயங்கார்களே" காரணமாவதால் இந்த 10,000 கோவில் நிலங்களை அவர்கள் பகிர்ந்து அளித்து சமத்துவத்தை நிலைநாடட்டும் 

ஆனால் மீதி உள்ள 22,000 கோவில்கள் சிறுதெய்வ மற்றும் குலதெய்வ கோவில்களுக்கு சொந்தமானது. இந்த கோவில்களின் நிலங்களை "கூறு போட்டுவிட்டால்" குலதெய்வ மற்றும் சிறுதெய்வ வழிபாடுகளை தெருவில் நின்றா செய்யமுடியும் ? 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டின் சின்னமே 'கோபுரம்'  தான்.  இதே ரீதியில் சென்றால் அடுத்த 10 ஆண்டுகளில் கோவில்களே இல்லாத தமிழகமாக மாறப்போவது உறுதி போல் தோன்றுகிறது 


 பின்குறிப்பு:- இந்த கோவில்கள் எல்லாம் ஒன்றும் கழக ஆட்சியில் கட்டப்பட்டவை அல்ல


நாட்டு நாய்களை காப்பாற்றுங்கள்

 இக்கட்டுரையை படிப்பவர்கள் இனிமேல் தயவு செய்து 'தெரு நாய்கள்' என்று அழைக்கவேண்டாம்.   'தெருவில் வசிக்கும் நாய்கள்' என்று அழை...