Monday, May 25, 2026

மின் துறையில் புதிய கட்டமைப்புகளை உருவாக்காமல் மீட்டெடுக்க அறிவியல் ரீதியான சில வழிமுறைகள் - மின் துறை கவனத்திற்கு

 மின்துறைக்கு  ஏற்கனவே 1 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது 


புதிதாக பொறுப்பேற்றுள்ள மின்துறை அமைச்சர், மின்துறையை சீரமைக்க 40 ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார்.


இன்னும் 40 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் ஆட்சிக்கு வரும், அவை எப்படி செயல்படும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது


நஷ்டத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.  


டெண்டர்களில் நடைபெறும் குளறுபடிகள், மின் விரையம் (transmission loss), மின்சார நிலையங்கள் அதன் முழு கொள்ளளவில் (production capacityல்) செயல்படாமல் இருப்பது, தனியாரிடம் அதிக பொருட் செலவில்  மின்சாரம் வாங்குவது  என்று நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன


இன்டர்நெட்டில் கிடைக்கும் CAG அறிக்கையை படிக்கும் பொது நிறைய விஷயங்கள் தெரிய வருகிறது 


இவற்றை எல்லாம் சரி செய்ய  இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும், எத்தனை ஆட்சிகள் மாறும் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது 


எந்த அரசாங்கம் வந்தாலும் நிலைமையை சீர்செய்ய இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன 


1)  தேவைக்கேற்ப மின்சார உற்பத்தியை பெருக்குவது (increasing production capacity)   -   இந்த முறை சரி செய்ய 40  ஆண்டுகள் ஆகும்

2) மின்சார உபயோகத்தை குறைப்பது (reducing power consumption)


வாடிக்கையாளர்கள் தலையில் மின் கட்டணத்தை ஏற்றாமல் இருக்கும் infrastructureஐ வைத்து கொண்டு பணத்தை திரட்ட எனக்கு தெரிந்து ஒரு சில வழிகள் இருக்கிறது.  


சிறு துளி பெரு வெள்ளம் என்பதை அரசாங்கம் நினைவில் கொண்டாலே போதும் பாதி பிரச்சனை தீர்ந்து விடும்.  மக்களும் ஒத்துழைக்க வேண்டும்



உபாயம் #1:  நம் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான EB post உள்ளன.  இதில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் (அல்லது) விளம்பர பலகைளுக்கு அரசாங்கம் ஒரு தொகையை கட்டணமாக வசூலிக்க வேண்டும்.


உதாரணமாக ஒருவர் 100 விளம்பரங்களை ஓட்டப்போகிறார் என்றால் EB இடம் அனுமதி பெற்று, கட்டணத்தை செலுத்திய பின்பே போஸ்டர்கள் ஓட்ட (அல்லது) கட்ட அனுமதிக்க பட வேண்டும் 


மேற்ககூறிய முறையில் பெருமளவு பணம் வராது என்றாலும் ஒரு நிரந்தர வருமானம் அரசாங்கத்திற்கு வரும்.  


உபாயம் #2:  Reelsக்கு  சற்று அதிகளவில் வரி போடுதல்.  இந்த முறையில் இரட்டிப்பு லாபம் உண்டு 


(a)  ஒன்று மாநில அரசாங்கத்துக்கு கிடைக்கும் வரி வருவாய் (SGST)

(b)  மற்றொன்று reels பார்க்கும் நேரம் குறைதல் மூலம், அடிக்கடி மொபைல் charge poda  வேண்டிய அவசியம் இருக்காது.  


இதனால் மின்சாரம் மிச்சமாகும்.  குறிப்பாக கோடி கணக்கான மொபைல் இருக்கும் போது இந்த நடவடிக்கை கட்டாயம் தேவை என்பதே என் எண்ணம்





மொட்டையாக கோடி கணக்கான மொபைல் போன்கள் என்று சொன்னால் எப்படி, சற்று அறிவியல் ரீதியாக பார்ப்போம் 

உதாரணமாக  எத்தனை மொபைல் போன்களை 1  நேரம் தொடர்ந்து  charge செய்தால் 1 GW மின்சாரத்தை உபயோகிக்க முடியும் என்று பார்க்கலாம்  (தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம், அவை திருத்தப்படும்)


Mobile Phones Consumption of Electricity

 



Laptop Consumption of Electricity




உபாயம் #3:  சென்சார் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்துதல்.  அதாவது தேவை இல்லாத நேரத்தில் அதுவாகவே அணைத்துகொள்ளுதல்.  IT கம்பனிகளில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது

இதை முறையை வீட்டில் பயன்படுத்தினால் 3 அல்லது 6 மாதங்கள்  மானியம் வழங்கப்படும் என்று ஊக்கப்படுத்துதல் (எப்படி சூரிய ஒளிக்கு மானியம் வழங்கப்படுகிறதோ அதை போன்று)


உபாயம் #4:   மின்சார சிக்கனத்தை பற்றிய புரிதலை  மக்களுக்கு தொடர்ந்து ஏற்படுத்துதல்


30 ஆண்டுகளுக்கு முன்பு தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில் கீழ்கண்ட  இந்த வாசகங்கள் அடிக்கடி திரையில் காட்டப்படும் 


"மின்சார சிக்கனம் தேவை இக்கணம்"


இப்போது சதா சர்வ காலமும் சினிமா, சீரியல் என்று அனைத்து சேனல்களும் பிஸியாக உள்ளன.


இப்போது புதிதாக வந்து உள்ள  அரசாங்கம் "மின்சார சிக்கனம் தேவை இக்கணம்" என்பதை அனைத்து சேனல்களுக்கும் கட்டாயமாக்க வேண்டும்.  Broadcasting Department மத்திய அரசு நிர்வகித்தாலும் மாநில அரசு மத்திய அரசுக்கு நிலைமையை  எடுத்து கூறி ஆவண செய்ய வேண்டும்



நன்றி

சதீஷ்  

No comments:

Post a Comment

முருகர் முப்பாட்டனா அல்லது தெய்வமா - ஒரு மாறுபட்ட கோணம் - 2

இது முந்தைய பதிவின் தொடர்ச்சி சென்ற பதிவில் முதல் இரண்டு வரிகளை பார்த்தோம் . இந்த பதிவில் அடுத்த இரண்டு வரிகளை பற்றி பாப்போம...