Friday, May 8, 2026

மருந்து கம்பெனிகளின் அதிகம் பேசப்படாத நூதன மோசடிகள்

 இந்தியாவில்  எனக்கு தெரிந்து அதிகம் பேசப்படாத தலைப்பு 'மருந்து தொழில்' சம்பந்தப்பட்ட இரு வேறு நூதன மோசடிகள் பற்றி பெரிதாக விவாதங்கள் நடைபெறவில்லை என்றே சொல்ல வேண்டும் 


மருந்து தொழில் என்றவுடன் தேவை இல்லாத (அல்லது) நோய்க்கு பெரிதும் தொடர்பில்லாத மருந்துகளை டாக்டர்கள் எழுதி கொடுத்து அதை நாம் வாங்குவது (அல்லது) நாம் வாங்கிய மருந்தை மீண்டும் மருந்து கடைக்கே திருப்பி கொடுப்பது என்ற ரமணா பட பாணியை பற்றி சொல்ல வரவில்லை


மோசடி #1:   இது வேறு விதமான மற்றும் மக்களே ஏற்று கொண்ட அல்லது மறைமுகமாக திணிக்கப்பட்ட  மோசடி


உதாரணமாக நமக்கு சளி, இருமல், ரத்த அல்லது வைட்டமின் குறைபாடு என்றால் syrup அல்லது  tonic எழுதி கொடுப்பார்கள் 


பெரும்பாலான tonic / syrup பாட்டில்கள் 100 ml களில் இருந்து  கிடைக்கின்றன.  




உதாரணமாக ஒரு நாளைக்கு 5 - 10 ml வீதம்,  2 அல்லது 3 நாட்களுக்கு  இம் மருந்துகளை நாம் சளி / இருமல் / காய்ச்சல் குணமாகும்  வரை எடுத்துக்கொள்வோம் 


அதவாது 100 ml பாட்டிலை வாங்கி 30 ml வரை பயன்படுத்தி விட்டு மீதம் 70 ml வீணடிக்கிறோம். 


இப்போது கேள்வி என்னவென்றால் ஏன் மருந்து கம்பெனிகள் 30 ml, 50 ml, 75 ml என்று சிறிய அளவிலான பாட்டில்களை தயாரிப்பதில்லை ?   





இப்படி இந்தியா முழுவதும் கணக்கிட்டால் இதுவே மருந்து கம்பெனிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஈட்டி தரும் 






மோசடி #2:  இது முதல் மோசடியை விட பல மடங்கு மோசமானது.


நம் இந்தியாவில் இந்த படிப்பு படித்தால் இந்த வேலை செய்யலாம் என்று வரையறை இருக்கிறது.  அதுவும் உயிர் காக்கும் மருத்துவர்களும், மருந்தை நமக்கு கொடுப்பவர்களும் குறைந்தபட்சம் அவர் சார்ந்த துறையில் படித்திருக்க வேண்டும் என்பதே விதி 


ஆனால், இந்தியாவில் இயங்கும் ஒரு குறிப்பிட்ட மருந்து கம்பெனி தனது மருந்து கடைகளில்  வேலைக்கு எந்த degree படித்தவர்களாக இருந்தாலும் பணியில் அமர்த்தி கொள்கிறது.  


அவர்களுக்கு 10 நாட்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் நேரடியாக வேலையில் ஈடுபடுத்த படுகிறார்கள்.  அவர்களுக்கு சந்தேகம் வந்தால் அந்த மருந்து கடையில் வேலை செய்யும் pharmacistஐ கேட்டு நமக்கு அதை கொடுக்கிறார்கள் 





இப்படி  B.Pharm (அல்லது) M.Pharm படித்தவர்களை விட்டுவிட்டு யாரை வேண்டுமானாலும்  வேலைக்கு அமர்த்தாலம் என்றல் அந்த மருந்து சம்பந்தப்பட்ட படிப்பு எதற்கு 


உயிர் காக்கும் மருத்துவ துறையில் இப்படி எல்லாம் செய்யலாமா ?  


அவர்களிடம் பணம் இருந்தால் அவர்கள் எத்தனை மருந்து கடைகளை வேண்டுமானாலும் திறந்து கொள்ளட்டும்.  வியாபாரம் செய்யட்டும். 




Siddha மருத்துவர் Allopathy மருந்துகளை பரிந்துரைக்க முடியாது.   ஆனால் மருந்து கம்பெனிகள்  அடுத்தவர்கள் உயிருடன் இப்படி விளையாட எந்த சட்டம் அனுமதிக்கிறது என்று தெரியவில்லை


நன்றி 

சதீஷ் 


No comments:

Post a Comment

Methods to Revive the Power Sector backed by Scientific evidences and without Creating New Infrastructure – For the Attention of the Electricity Department

It is reported that the Electricity Department is already burdened with a debt of ₹1 lakh crore. The newly appointed Minister for Electricit...